Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மதத்திற்கு எதிராக அமெரிக்கா யுத்தம் புரிந்து வருகிறது - அய்மன் அல் ஷவாஹிரி

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் மதத்தை இழிவுபடுத்தும் திரைப்படத்திற்கு எதிராக மேலும் ஆர்பாட்டங்களை நடத்துவதற்கு அல் கைய்தா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தமது மதத்திற்கு எதிராக அமெரிக்கா யுத்தம் புரிந்து வருவதாகவும் அல் கைய்தா இயக்கத் தலைவர் அய்மன் அல் ஷவாஹிரி குறிப்பிட்டுள்ளார்.

அல் கைய்தா தலைவர்களின் அறிக்கைகளை வெளியிடும் இணையத்தளமொன்றில் ஷவாஹிரியின் குரல் பதிவில் ஆர்பாட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனிநபர் சுதந்திரம் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த திரைப்படத்திற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஷவாஹிரி கூறியுள்ளார்.

குவாண்டனாமோ, ஈராக் மற்றும் ஆப்கானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடயத்தில் இந்த சுதந்திரங்கள் பின்பற்றப்படுவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post