Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நடத்திய தமிழ் மொழி பண்பாட்டு விழிப்புணர்வு போட்டிகள். (படங்கள்)


நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை நடத்திய  தமிழ் மொழி பண்பாட்டு விழிப்புணர்வு போட்டிகள் -

இன்று கொளத்தூர் பகுதியில் நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய மாணவர்களுக்கான பல் வேறு பரிசுப் போட்டிகள் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது . இதில் சுமார் 250 மாணவ மாணவிகள் பங்குபெற்றனர். மழலை பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பங்குபெற்றனர். அவர்கள்  ஓவியப் பூட்டி, ஒப்புவிக்கும் போட்டி, பேச்சிப்  போட்டி முதலான போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேபெற்றனர். ஓவியப் போட்டியில் கடவுள் படங்கள் வரையக் கூடாது , இந்திய தேச தலைவர்கள் படங்கள் வரையக் கூடாது என்ற நிபந்தனை கொடுக்கப்பட்டது. அதனால் பலரும் அவர்கள் மனதுக்கு தோன்றிய பல படங்களை வரைந்து மகிழ்தனர் . பெரிய வகுப்பு மாணவர்கள் அரசியல் நையாண்டி கேலிச் சித்திரமும் வரைந்தனர். தனியார் பள்ளிகளில் தமிழ் முற்றிலும் மறைந்துவிட்ட இந்த சூழலில் இம்மாதிரியான போட்டிகள் தான் மாணவர்களுக்கு மீண்டும் தமிழ் பண்பாட்டு உணர்வை மீட்டெடுக்கும் என்பதில் ஐயமில்லை. பேச்சு போட்டியில் தமிழக கவிஞர்களை பற்றிய தலைப்பும் கொடுக்கப்பட்டது. நான்கு  வயது மாணவி முப்பது திருக்குறள் ஒப்புவித்து சாதனையும் படைத்தாள். இது போல் தமிழர் பண்பாடு விழிப்புணர்வு போட்டிகள் எல்லா மாவட்டங்களிலும் தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் இயக்கங்கள் நடத்த முன்வர வேண்டும் . 
































































[vuukle-powerbar-top]

Recent Post