Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் இரண்டு அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இருவர் பலி

சென்னையில் உள்ள இரண்டு அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி இருவர் பலி. 

சென்னை திருவல்லிக்கேணி அருகே இன்று காலை 7.30 மணியளவில் இரண்டு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இட்ந்து விழுந்தது.இதில் இடிபாடுகளில் சிக்கி இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்புத் துறையினர் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மேலும் விபத்து ஏற்பட்ட கட்டிடம் மிகவும் பழமையான கட்டிடம் எனவும் குறைவான வாடகைக்கு ஆசைப்பட்டு மக்கள் அந்த கட்டிடத்தில் வாழ்ந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விபத்து நடந்த பகுதியில் கட்டிடங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post