Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"தீனா" படத்தின் பின்னர் அஜித் விசிறியாக மாறிய இயக்குனர் வெங்கட் பிரபு.


 இயக்குனர் வெங்கட் பிரபு தொகுத்து வழங்கும் "கோலிவுட் கிங்" என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

கடந்த வாரம் ஆரம்பமான இந்நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.விஜய் தொலைக்காட்சி பிரியர்கள் மட்டுமன்றி ஏனைய தொலைக்காட்சி ஆர்வலர்களையும் ஈர்த்துள்ளது இந்நிகழ்ச்சி.

முதல் நாள் நிகழ்ச்சியில்  நடிகர் அஜித் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டபோது,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த "தீனா" படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. அப்போதிலிருந்து தான் அஜித்தின் மிக பெரிய விசிறியாக மாறிவிட்டதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்,

அத்தோடு, இப்படத்தை அஜித் இரசிகர்களுக்கு விருந்தாக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு தன் நன்றியை தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

"தீனா" படம் வெளிவந்த பின்னரே அஜித் "தல" என இரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கோலிவுட் கிங்" என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து பாருங்கள், கோலிவுட்டின் கிங்காக மாறுங்கள்.


[vuukle-powerbar-top]

Recent Post