Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாலாவின் படத்தில் நடிக்க ஆசைப்படும் "சுந்தரபாண்டியன்" நாயகி.


இயக்குனர் பாலாவின் "நான் கடவுள்" படத்தில் நடித்தது, நடிகை பூஜாவை பொறுத்தவரை அவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்.இப்படத்தில் கண் பார்வையற்ற பாடகியாக நடித்த பூஜாவின் நடிப்பு பலபேரின் பாராட்டை பெற்றிருந்தது.

இப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பாலாவிற்கே கிடைத்திருந்தது.அத்தோடு சிறந்த ஒப்பனைக்கான விருதும் கூட இப்படத்திற்கே கிடைத்திருந்தது.இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் தோன்றிய பூஜாவின் ஒப்பனை யாராலும் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு மிக சிறந்ததாக அமைந்திருந்தது.

இவ்வாறு பூஜாவிற்கு ஒரு "நான் கடவுள்" படம் அமைந்தது போல, நடிகைகள் லைலா மற்றும் சங்கீதா ஆகியோருக்கு பாலாவின் படங்களான "பிதாமகன்" மற்றும் "நந்தா" ஆகிய படங்கள் நல்ல பெயரை பெற்றுத்தந்தன.

இதேபோல் தன் நடிப்பையும் பிறர் பாராட்ட  வேண்டும் என்ற எண்ணத்தில் எப்படியாவது பாலாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கிறார் "சுந்தரபாண்டியன்" படத்தில் நடித்த நடிகை லக்ஷ்மி மேனன்.


இவரது ஆசையை பாலா நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



[vuukle-powerbar-top]

Recent Post