Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கைப் படையினருக்கு காவல் காக்கும் முன்னால் போராளிகள்!


சிவில் பாதுகாப்பு அமைச்சினால் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் நியமனம் பெற்ற 350 இளைஞர் யுவதிகள் எவ்வித வேலைகளும் வழங்கப்படாது கைவேலி காட்டுப் பகுதியிலுள்ள படை முகாமுக்கு முன்னால் போராளிகள்  விடப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மூலம் 'சிவில் பாதுகாப்பு ஊழியர்' என்ற பதவிக்கு வன்னிப் பகுதியில் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வெளியேறிய முன்னாள் போராளிகள் உட்பட 350 பேர் இணைக்கப்பட்டனர்.கைவேலி உடையார்கட்டு வள்ளிபுனம் புதுக்குடியிருப்பு எனப் பல்வேறு பகுதியிலிருந்து 250 யுவதிகளும் 100 இளைஞர்களும் தெரிவுசெய்யப்பட்டு நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன.
இவர்களுக்கான பணிகள் எவையெனக் குறித்தொதுக்கப்படாது நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவரும் கைவேலி காட்டுப்பகுதியிலுள்ள படை முகாமுக்கு முன்னால் விடப்பட்டுள்ளனர்.
இவர்கள் தினமும் காலையில் 8.30 மணிக்கு அவ்விடத்தில் சென்று கூடியிருந்து கதைப்பதும் மாலை 5 மணியானதுடன் வீடு திரும்புவதுமாக உள்ளனர். இவர்களுக்கான வரவுப் பதிவுகளை அந்தப் பகுதியிலுள்ள படையினரே கவனித்து வருகின்றனர்.
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்று தங்களை நியமித்து விட்டு படை முகாமுக்கு காவலுக்கு விட்டுள்ளார்களே என முன்னால் போராளிகள் விசனம் வெளியிட்டுள்ளார்கள்.
[vuukle-powerbar-top]

Recent Post