Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் ~ வைகோ

வைகோ தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போர்! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது. கர்நாடகத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும், 

காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், 

நாளை (அக்டோபர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும். 

‘தாயகம்’ 
கோ. நன்மாறன் 
சென்னை-8 
செய்தித் தொடர்பாளர், 11.10.2012 
மறுமலர்ச்சி தி.மு.க.
[vuukle-powerbar-top]

Recent Post