Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சந்தனக் காடு வீரப்பனின் நினைவு தினத்தை அனுசரித்த கர்நாடக தமிழர்கள் (படங்கள்)

சந்தனக் காடு வீரப்பனின் நினைவு தினத்தை அனுசரித்த கர்நாடக தமிழர்கள். 

சந்தனக் காட்டு ராஜாவாக திகழ்ந்தவர் வீரப்பன். இவர் பிறந்தது ஜனவரி 18, 1952. இறந்தது அக்டோபர் 18, 2004. இவரை தமிழ்நாட்டு மக்கள் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றே அழைப்பார்கள் . 1970 களில் இருந்து தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள காடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வந்த வீரப்பன் இறுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல்துறையால் சுட்டு வீழ்த்தப்பட்டார். எனினும் இவருடைய சாவில் மர்மம் உள்ளது என்றும் சிலர் கருதுகின்றனர்.  இவர் இருக்கும் வரை இவர் தமிழக எல்லை பாதுகாவலர் போலவே செயல்பட்டு வந்தார் என்பது பலருடைய கருத்து . குறிப்பாக காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசை இவர் ஆட்டி வைத்தார். தமிழ் தேசியத்தை ஆதரித்தவர் வீரப்பன் என்பதும் குறிப்பிடத் தக்கது . இந்நிலையில் இந்த ஆண்டு அவரது நினைவு நாளில் பெங்களூரில் உள்ள தமிழர்கள் ஒன்று கூடி தமிழ் தேசியத்தின் அடையாளமாக  வீரப்பனை முன்னிறுத்தி அவருக்கு வீரவணக்கம் செலுத்தி உள்ளனர்.











[vuukle-powerbar-top]

Recent Post