Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சோனியா காந்திக்கு நினைவு தினம் என்று செய்தி வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கேலிக் கூத்து


சோனியா காந்திக்கு நினைவு தினம் என்று செய்தி வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கேலிக் கூத்து. 

அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் மறைந்த இந்திய நாட்டு பிரதமரின் நினைவு தினம். இன்றோடு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 28 ஆண்டுகள் ஆகிறது.  இந்த நினைவு நாளை தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியினர் அனுசரித்துள்ளனர். இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகம் பத்திரிக்கை செய்தி ஒன்று வெளியிட்டது. அந்த செய்தியில் இந்திரா காந்திக்கு பதிலாக அன்னை சோனியா காந்தி என்று அவர்கள் தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளனர். இது பத்திரிக்கையாளர்கள்  நடுவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த அறிக்கை அதிகமாக பகிரப்பட்டு வருகிறது .தமிழ்நாடு  காங்கிரஸ் அலுவலகத்தின் இந்த செயல் மீண்டும் ஒரு கேலிக் கூத்தாகும். முன்பு ஒரு முறை அமெரிக்க டைம்ஸ் பத்திரிக்கையை எரிப்பதற்கு பதில் இந்தியாவின் டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கையை அமெரிக்க தூதரகம் முன் இதே தமிழ் நாடு காங்கிரஸ் காரர்கள் எரித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்படி ஒரு பிழையான செய்தியை காங்கிரஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது , காங்கிரஸ் காரர்களின் அலட்சியத்தை காட்டியுள்ளது. உயிரோடு இருக்கும் சோனியா காந்திக்கு நினைவு தினமா என்று பலரையும் குளுப்பி விட்டனர் காங்கிரஸ் கட்சியினர். 



[vuukle-powerbar-top]

Recent Post