Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரிப் பிரச்சனை . கர்நாடகாவின் கோரிக்கையை பிரதமர் நிராகரித்தார்


காவிரி நீர் விவகாரம் தொடர்பாக காவிரி நதிநீர் ஆணைய‌ம் ‌பிற‌ப்‌பி‌த்த உத்தரவை திரும்பப் பெற முடியாது'' க‌ர்நாடகா தலைவ‌ர்க‌‌ளிட‌ம் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌தி‌‌ட்டவ‌ட்டமாக கூ‌றி‌‌வி‌ட்டா‌ர்.

இத‌னிடையே காவிரி ஆணையத்தை மீண்டும் கூட்டக் கோரி பிரதமரிடம் கர்நாடகா இன்று புதிய மனு கொடு‌க்க இரு‌க்‌கிறது. காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி நதிநீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர்கள் கோரினர். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்தார். இந்நிலையில், தண்ணீர் திறந்துவிடுவதை கர்நாடகா நிறுத்தியுள்ளது. இத்தகவலை கிருஷ்ண ராஜ சாகர் அணையின் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திற்கு இதுவரை 3 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டதாகவும், அணையில் தற்போது 19 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post