Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீனவர்கள் மீது இலங்கை கடற்ப்படை மீண்டும் தாக்குதல் - தூக்கத்தில் இந்தியா

இராமேஸ்வர மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்ப்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.மேலும் மீனவர்களிடம் இருந்து மீன்களையும் திருடிச் சென்றுள்ளது.


இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 620 விசப்படகிகளில் மீன் பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர்.இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடிக்கும் கச்ச தீவுக்கும் இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்பொழுது அங்கு வந்த இலங்கை கடற்ப்படையினர் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்துள்ளன.மேலும் மீனவர்களிடம் இருந்து மீன்களையும் இலங்கை கடற்படையினர் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன் பிடிக்காமல் கரையை வந்தடைந்தனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியங்களால் மீனவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்தியாவின் நட்பு நாடான இலங்கையை இந்திய அரசு எந்தவொரு கேள்வியும் கேட்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது.
[vuukle-powerbar-top]

Recent Post