Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

எங்களையும் செய்ய விடவில்லை, அரசும் செய்யவில்லை - விஜயகாந்த குமுறல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

வடகிழக்கு பருவமழை இப்பொழுதுதான் துவங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை பெருநகர் பகுதிகளில் மழையால் தண்ணீர் தேங்கும் இடங்களில் 1/2 மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டுமென மாநகராட்சி அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால் நடைமுறையில் நிலைமை படுமோசமாகவே உள்ளது. தேங்கிய தண்ணீர் வெள்ளமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த சாலைகள், மேலும் மோசமாகி பழுதடைந்து விட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. அலுவலகங்களுக்கோ,வணிக நிறுவனங்களுக்கோ, மருத்துவமனைகளுக்கோ, பள்ளிகளுக்கோ குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை. பள்ளிக் கூடத்திற்கு செல்லும் பிள்ளைகளின் அவதி சொல்லிமாளாது. அறுந்து விழுகின்ற மின் கம்பிகளில் அகப்பட்டு மரணம் அடைகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் இயங்க முடியாமல் அன்றாடப் பணிகளை செய்ய முடியாமலும் முடங்கும் சூழ்நிலையில் உள்ளனர். குடி தண்ணீரும், சாக்கடை நீரும் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் வரும் என்று தெரிந்தும் மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாறும் பணிகளை முடிக்காதது ஏன்?. 

மக்களுக்காக மக்கள் பணி என்ற திட்டத்தை நிறைவேற்ற தே.மு.தி.க.வினர் மருத்துவமனைகளில் சுத்தம் செய்தல், சாலைகளை செப்பனிடுதல், கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு முழுவதும் பணிகளை மேற்கொண்டும், பல இடங்களில் அரசு அதிகாரிகள் எங்களை செய்ய விடாமல் தடுத்தனர். எங்களையும் செய்ய விடவில்லை, அரசும் செய்யவில்லை. இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.


[vuukle-powerbar-top]

Recent Post