Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்கான கொள்கைகளை தமிழக அரசு வெளியீடு

சூரிய சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதற்கான கொள்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை – 2012″ஐ முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அடுத்த 3 ஆண்டுகளில் தலா ஆயிரம் மெகாவாட் வீதம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, புதிய அரசு கட்டடங்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

பழைய கட்டடங்களில் படிப்படியாக சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரு விளக்குகள், குடிநீர் வழங்கும் அமைப்புகள் போன்றவை படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

பெரும் தொழிற்சாலைகள், உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு மின்சாரத்தை சூரிய சக்தியிலிருந்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள். வீடுகளில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்களை நிறுவ ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post