Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இடம்பெறும் கிரனைட் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரனைட் குவாரிகளை தொடர்ந்து, கிரனைட் பாலிஷ் செய்யும் தொழிற்சாலைகளிலும் சோதனை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூஜா குல்கர்னி தெரிவித்துள்ளார்.மதுரையை போன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஏராளமான கிரனைட் குவாரிகளில் மோசடி நடைபெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து, கடந்த 3 மாதங்களாக அங்குள்ள குவாரிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 163 குவாரிகளில் இதுவரை 50 குவாரிகளில் ஆய்வுகள் முடிவடைந்துள்ளன.

இதுதொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், குவாரிகளில் இருந்து கிரனைட் பாலிஷ் செய்யப்படும் தொழிற்சாலைகளுக்கு கிரனைட் கற்கள் கடத்தப்படுவதாக புதிய புகார் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து, பாலிஷ் தொழிற்சாலைகளில் கனிமவளத்துறையினர் விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும், முறைகேட்டில ஈடுட்டதாகத் தெரியவரும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post