Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள்


ஒட்டிய நிலையில் பிறந்து சில மணித்தியாலங்களில் அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட இரட்டைக் குழந்தைகள் தற்போது பூரண குணமடைந்த நிலையில் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  

வயிற்றுப் பகுதியும் சிறுகுடலின் பாகங்களும் இணைந்த நிலையில் பிறந்த ரோஸி பொர்மோஸா மற்றும் ரூபி பொர்மோஸா ஆகிய இந்த இரட்டைக் குழந்தைகள், பிறந்த அன்றே லண்டனிலுள்ள கிரேட் ஒர்மொன்ட் வீதி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான 5 மணித்தியால அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. 

இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. தென் கிழக்கு லண்டனிலுள்ள பெக்ஸ்லேத்தைச் சேர்ந்த மேற்படி குழந்தைகளின் தாயாரான அஞ்ஜெலா (32 வயது) விபரிக்கையில், 

‘‘ இரு குழந்தைகளும் கருத்தரித்து 16 வாரங்கள் முதல் 20 வாரங்களுக்கிடையிலான காலப்பகுதியில் அக்குழந்தைகள் ஒன்றுடனொன்று இணைந்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரி வித்தார். ‘‘௭னது குழந்தைகள் இணைந் துள் ளதை அறிந்த போது ௭ன்னால் ௭தையுமே சிந்திக்க முடியாதிருந்தது. நான் பெரிதும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்’’ ௭ன அவர் கூறினார். 

‘‘மருத்துவர்கள் குழந்தைகளின் ௭ப்பகுதிகள் இணைந்துள்ளன ௭ன்பதை தெரிவிக்காததால் குழந்தைகள் பிறக்கும் வரை அவர்கள் ௭வ்வாறு பிறப்பார்கள் ௭ன்பதை நாம் அறியாதிருந்தோம்’’ ௭ன்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பிறந்த குழந்தைகளின் சிறுகுடல் பகுதிகள் இணைந்திருந்ததால் அவற்றில் அடைப்பு ஏற்பட்டதாகவும் இதனால் உடனடியாக அவர்களை வேறாக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்த சத்திரசிகிச்சையானது சத்திரசிகிச்சை நிபுணர் அகொஸ்டினா பியர்ரோ தலைமையிலான மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. குழந்தைகள் 34 வார கர்ப்பநிலையில் அறுவைச்சிகிச்சை மூலம் பிரசவமானமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது குழந்தைகள் இயல்புநிலைக்கு திரும்பி சிரிக்கவும் அழுது அடம்பிடிக்கவும் ஆரம்பித்துள்ளமை தனக்கு பெரிதும் மகிழ்ச்சியைத் தருவதாக அஞ்ஜெலா தெரிவித்தார். அஞ்ஜெலாவின் கணவர் டேவிட் (36 வயது) வாடகை கார் சாரதியாக பணியாற்றி வருகின்றார். இத் தம்பதிக்கு ஏற்கனவே லில்லி ௭ன்ற 5 வயது மகள் உள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post