Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மாற்றுத்திறனாளிக்கு புதுச்சேரியில் பணி வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு

சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.சுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான், முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். 2009-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்வு செய்யப்பட்டேன். நான், 90 சதவீதம் காது கேட்கும் திறனை இழந்தவன். இதற்கான சான்றிதழையும் முறையாக தாக்கல் செய்துள்ளேன். இந்த நிலையில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளர், எனக்கு டெல்லியில் பணி வழங்கி 15.3.2011 அன்று உத்தரவிட்டார்.

புதுச்சேரி மாநிலத்தில் காலி பணியிடங்கள் இருந்ததால், என்னை அந்த பதவிக்கு நியமிக்கக்கோரி மனு கொடுத்தேன். ஆனால் அதிகாரிகள் என்னுடைய கோரிக்கையை ஆராயவில்லை.

டெல்லியில் பணி வழங்கியுள்ளனர். இந்த பணி நியமன உத்தரவை ரத்து செய்து, புதுச்சேரி மாநிலத்தில் எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதித்துறை உறுப்பினர் ஜி.சாந்தப்பா, நிர்வாகத்துறை உறுப்பினர் ஆர்.சதபதி ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் சுந்தரராஜனுக்கு, 4 வாரத்துக்குள் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளர் புதுச்சேரியில் பணி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post