Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ரஜினியுடன் கூட்டு சேர்வாரா முருகதாஸ்?


நேற்று நடைபெற்ற "துப்பாக்கி" படத்தின் பாடல்கள் வெளியிடும் நிகழ்வில்  கலந்து கொண்டு பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு,சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அவருடன் உரையாடியதாகவும், அப்போது நடிகர் விஜய் பற்றி  தாம் இருவரும் பேசியதாகவும் தெரிவித்தார்.

நடிகர்  விஜய்யோடு சேர்ந்து படம் பண்ணுவது மிக இலகு என்றும் சில இக்கட்டான சமயங்களில் தயாரிப்பாளருக்கு கூட உதவி செய்யும் பக்குவம் நடிகர் விஜய்க்கு மட்டுமே உண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு நடிகர் ரஜினிகாந்த்  உடனான சந்திப்பின் போது இயக்குனர் முருகதாஸ் பற்றியும், அவருடைய இயக்கத்தை பற்றியும் பேசியதாகவும் தெரிவித்தார். அண்மையில் நமக்கு கிடைத்த தகவலின் படி, நடிகர் ரஜினிகாந்தும் இயக்குனர் முருகதாசும் இணைந்து ஒரு படம் பண்ணுவது குறித்து விவாதித்து வருவதாக செய்திகள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணுவுடனான நடிகர் ரஜினிகாந்தின் சந்திப்பு இதை சற்று உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.இயக்குனர் முருகதாசின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் பட்சத்தில் அப்படம் ரஜினி இரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு அலை செய்திகளின் திரைகடலுடன் இணைந்திருங்கள்.


[vuukle-powerbar-top]

Recent Post