Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

டெல்லி சுல்தான்களின் காலம் முடிந்து விட்டது - நரேந்திர மோடி அதிரடி


11 வருட ஆட்சியை நிறைவு செய்துள்ள குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி அகமதாபாத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி கூறியதாவது:-

நடைபெறவுள்ள குஜராத் தேர்தலில் பிரதமரான மன்மோகன் சிங் இங்கு என்னுடன் போட்டியிடத் தயாரா?. நீங்கள் ரோடு போடுகிறீர்கள். நானும் கூட ரோடு போடுகிறேன். நீங்கள் கால்வாய் வெட்டுகிறீர்கள். நானும் கூட கால்வாய் வெட்டுகிறேன். நீங்கள் மருத்துவமனை கட்டுகிறீர்கள். நானும் கூட மருத்துவமனை கட்டுகிறேன். அதை மக்களை பார்க்க விடுவோம். யார் சிறப்பாக செய்திருக்கிறார் என்று, அவர்களே முடிவு பன்னட்டும். காங்கிரஸார் என்னுடன் போட்டியிட விரும்பவில்லை. அவர்கள் வெறும் வாய்ஜாலம் மட்டுமே செய்ய விரும்புகின்றனர். 

நான் காங்கிரஸை எச்சரிக்கிறேன். நீங்கள் குஜராத் மீது சவாரி செய்யலாம் என்று நினைக்காதீர்கள். டெல்லி சுல்தான்களின் காலம் முடிந்து விட்டது என்று இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இவ்வாறு நரேந்திர மோடி டெல்லிக்கும் பிரதமருக்கும் சவால் விடுத்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post