Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தமிழகத்தில் மழை குறையும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது.இந்த நிலையில் அரபிக் கடலில் புதிதாக உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் த்ற்பொழுது அந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post