Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

அமெரிக்கா மீண்டும் கேள்வி போர்க்குற்ற மீறல்கள் குறித்த விசாரணையின் நிலை என்ன?

இலங்கையில்   போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்னவென்று, அமெரிக்கா மீண்டும் வினவியுள்ளது.

நியுயோர்க்கில் இலங்கையின் நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றோபேட் ஓ பிளேக் இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது, இலங்கை அரசாங்கம் எதையும் மறைக்காது என்று தாம் உறுதியளித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
திருகோணமலையில் 5 மாணவர்கள் 2006 இல் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று உத்தரவாதம் அளித்ததாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post