Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி

ஈ.வி.பி பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர் பெருமாள் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஈ.வி.பி பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்திலிருந்து நாகலந்தைச் சேர்ந்த ஆஃபியா மேக் என்ற, தனியார் விமான பணி பெண் ஒருவர் தவறி விழந்து பலியானார்.

இச்சம்பவத்தையடுத்து கேளிக்கை பூங்காவில் ராட்டின செயல்பாடுகளுக்கு போலீஸார் தடை விதித்தனர். விபத்து தொடர்பாக ராட்டின ஆப்ரேட்டர் வில்லியம்ஸ், உதவியாளர் அசோக், பூங்கா பொறுப்பு மேலாளர் ரகு ஆகியோர் ஏற்கனவே நேற்று கைது செய்யப்பட்டனர்.

பூங்கா உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[vuukle-powerbar-top]

Recent Post