Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பௌத்த பிக்குகள் தூதரகத்தை தாக்கியதால் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்

கொழும்பிலுள்ள பங்களாதேஸ் தூதரகத்தின் மீது பௌத்த பிக்குகள் நடத்திய தாக்குதலை அடுத்து, பங்களாதேசில் உள்ள இலங்கை குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களை அவமதிக்கும் கருத்து ஒன்று முகநூலில் வெளியானதை அடுத்து பங்களாதேசில் பௌத்தர்கள் மற்றும் பௌத்த ஆலயங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து அங்கு இரு மதத்தவர்களுக்கும் இடையில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

இந்தநிலையில் பௌத்த ஆலயங்கள் பங்களாதேசில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பிலுள்ள அந்த நாட்டுத் தூதரகத்தை பெளத்த பிக்குகள் தாக்கியிருந்தனர்.

இந்தநிலையில், பங்களாதேசில் உள்ள இலங்கை குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

டாக்கா, சிட்டகொங் உள்ளிட்ட நகரங்களில் பெருமளவு இலங்கை மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர்.

இந்தநிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் உத்தரவின் பேரில், பங்களாதேசில் உள்ள இலங்கை தூதுவர் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது இலங்கை குடிமக்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
[vuukle-powerbar-top]

Recent Post