Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

வடக்கு,கிழக்கில் சூறாவளி அபாயம் - நேற்றிரவு ஆயிரக்கணக்கான கரையோர மக்களை வெளியேற்றியது இலங்கை அரசு

இலங்கையின் வடக்குப் பகுதி ஊடாக சிறியளவிலான சூறாவளி இன்று அதிகாலை கரையைக் கடக்கும் என்பதால், நேற்றிரவு அவசர அவசரமாக ஆயிரக்கணக்கான கரையோரப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர வேண்டுகோளை அடுத்து, குச்சவெளி தொடக்கம் காங்கேசன்துறை வரையான கரையோரப்பகுதி மக்கள் நேற்றிரவு 10.30 மணி தொடக்கம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். 

கரையோரத்தில் இருந்து 500 மீற்றர் தூரம் வரையான பகுதிகளில் வசித்த மக்களே வெளியேற்றப்பட்டுள்ளனர். 

பொதுமக்களை வெளியேற்றும் இந்த அவசர நடவடிக்கையில் இலங்கை இராணுவம், காவல்துறை, மற்றும் தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
[vuukle-powerbar-top]

Recent Post