Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

"துப்பாக்கி என்னுடைய கனவுப் படம்"- நடிகர் விஜய்.


"துப்பாக்கி" படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த புதனன்று சென்னையில் நடைபெற்றது.இவ்விழாவில்  பேசிய நடிகர் விஜய்,"துப்பாக்கி" படமானது தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தான் எதிர்பார்த்திருந்த கதையம்சம் கொண்ட படம் எனவும், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற ஒரு இயக்குனருடன் வேலை செய்வது என்பது மிக மிக அருமையான ஒரு வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.

முருகதாசை இனி குட்டி மணிரத்தினம் என்றே தான் அழைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.நடிகை காஜல் அகர்வாலை பற்றி கூறிய விஜய், அவர் ஒரு சிறந்த நாயகி என்றும் அவருடன் சேர்ந்து நடித்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

இப்படத்தின் இன்னுமொரு மிகப் பெரிய விடயமாக அமைந்திருப்பது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.இப்படத்திற்காக இவர் அமைத்த மெட்டுக்கள் அனைத்தும் விஜய் இரசிகர்களால் மிக பெரிய வரவேற்பிற்கு உள்ளாகப் போகின்றன  என்பதில் ஐயமில்லை.

மதன் கார்கியின் வரிகளில்  அமைந்த "கூகிள் வூகிள்" என்ற பாடலை இப்படத்திற்காக பாடியுள்ளார் நடிகர் விஜய்.


[vuukle-powerbar-top]

Recent Post