Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இலங்கை அகதியை ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்

இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை காவல்துறை நேற்று கைது செய்துள்ளனர். 

அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு விஸா பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியதாக இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார். 

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்பு பட்ட திரைப்படத் தயாரிப்பாளர் சென்னை விருகம்பாக்கத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபரிடமிருந்து எட்டு போலி கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த திரைப்படத் தயாரிப்பாளர் அகோரம் எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post