Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இந்திய கடற்படையின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலி

இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்திய கடற்படையின் சேடாக் ஹெலிகாப்டர், மும்பையில் இருந்து மங்களூரு செல்லும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக கோவாவில் உள்ள டாபோலின் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

அப்போது, ரன்-வேயில் ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்ததால், விபத்துக்குள்ளானது. இதில், ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு அதிகாரிகள், ஒரு கடற்படை வீரர் என மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால், விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த விமானங்கள் தாமதமாகின.
[vuukle-powerbar-top]

Recent Post