Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் அணுஉலையில் எரிபொருள் நிறைவு என பகீர் தகவல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முதலாவது அணுஉலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிரப்பும் பணி கடந்த மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணி கடந்த ஒன்றாம் தேதி நிறைவடைந்தாக கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து கிரிட்டிகாலிட்டி எனப்படும் மின்உற்பத்திக்கு முந்தைய பணி தொடர்பான ஆய்வில் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணைய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதுதொடர்பான பணிகள் ஒரு மாத காலத்திற்கு மேல் நீடிக்கும் எனத் தெரிகிறது. இதனிடையே கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக , பூவுலகின் நண்பர் குழு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post