Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சென்னையில் ஆறாம் ஆண்டாக நடைப்பெற்ற தமிழக பண்பாட்டு கண்டாட்சி (படங்கள்)

இன்று சென்னை மயிலையில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு தமிழக பண்பாட்டு கண்காட்சி சிறப்பாக நடைபற்றது . தமிழக பெண்கள் செயற்களம் நடத்தும் இந்த கண்காட்சியில் கற்கால தமிழர் வராலறு முதல் ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை படங்களாக ஆவணப் படுத்தி உள்ளனர் . இக்கண்காட்சியில் நிறைய பொதுமக்கள், சிறுவர்கள் , மாணவர்கள் என எல்லா தரப்ப்பு மக்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர். தமிழர் வரலாறு திட்டமிட்டு மறைக்கப் பட்டுவிட்ட இன்றைய சூழலில் இத்தகைய கண்காட்சி காலத்தின் அவசியம் ஆகும் . விரைவில் இக்கண்காட்சி தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் நடத்த இருகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

இக்கண்காட்சியில் , தமிழர் வரலாறு மட்டுமின்றி, தமிழுக்காக பாடுபட்ட மனிதர்கள் , தமிழ்நாட்டு தலைவர்கள் , தமிழர்களின் உணவு முறை , தானியங்கள் , அறுபத்து நான்கு கலைகள், இசைக்கருவிகள் , பண்டைய இலக்கிய நூல்கள் , தமிழர் உற்பத்தி பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. அதனால் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக இந்நிகழ்வில் பங்குபெற்றனர். 































[vuukle-powerbar-top]

Recent Post