Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

ஆசிரியர் தகுதி மறுதேர்வு தமிழகம் முழுவதும் நாளை

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆசிரியர் தகுதி மறுதேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. 

ஆசிரியர் கல்வியியலில் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் முதல் தாள் தேர்வையும், ஆசிரியர் கல்வியியலில் பட்டம் பெற்றவர்கள் இரண்டாம் தாள் தேர்வையும் எழுத உள்ளனர். முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 52,297 பேரும், இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 64 ஆயிரத்து 452 பேரும் எழுதுகின்றனர். 

58,644 பேர் இரண்டு தாள்களையும் எழுதுகின்றனர். இவர்களுடன் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 3 ஆயிரத்து 719 பேரும் ஆசிரியர் தகுதி மறுதேர்வை எழுதுகின்றனர். 

தமிழகம் முழுவதும் 1,094 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை அமைதியான முறையிலும், முறைகேடுகள், குழப்பங்கள் அற்ற முறையிலும் நடத்த மாவட்ட அளவில், வருவாய்த் துறை, கல்வித் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post