Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

யாழ் நாளிதழ்களிடம் நட்டஈடு கோருகிறார் இலங்கை இராணுவத் தளபதி

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் இரண்டு தமிழ் நாளிதழ்கள் மீது இலங்கை இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இன்று மானநட்ட வழக்குத் தொடுக்கவுள்ளார். 

தனது பெயரைக் கெடுக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டதற்காகவே, யாழ்ப்பாண தமிழ் நாளிதழ்கள் மீது இலங்கை இராணுவத் தளபதி யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவுள்ளதாக இலங்கையின் உயர்இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இலங்கை இராணுவத்தில் உள்ள மூத்த அதிகாரிகளும், புறசக்திகளும் தனது அதிகாரங்களைப் பறித்துக் கொண்டு விட்டதால், இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவு மட்டும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை இராணுவத்தளபதி கூறியதாக, வெளியிடப்பட்ட செய்திக்கு எதிராகவே இந்த வழக்குத் தொடுக்கப்படவுள்ளது. 

எனினும் இவ்வாறு தான் கூறவில்லை என்றும், அந்த செய்தியில் உண்மையில்லை என்றும் இலங்கை இராணுவத் தளபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தச் செய்தி தொடர்பாக இலங்கை இராணுவத்தளபதி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கொழும்பில் இருந்து சென்ற இலங்கை புலனாய்வு அதிகாரிகள் உதயன் மற்றும் வலம்புரி நாளிதழ்களின் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post