Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நீருக்காக தமிழக விவசாயிகள் இன்று போராட்டம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் தர வலியுறுத்தி தமிழக விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் வழங்க வலியுறுத்தி டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதனிடையே, தமிழகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் காவிரி நீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கன்னட அமைப்புகள் மற்றும் கர்நாடக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனிடையே, கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஆளுநர் பரத்வாஜை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

காவிரி விவகாரத்தினால் எழுந்துள்ள சட்ட- ஒழுங்கு பிரச்னை குறித்து அவர் ஆளுநருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
[vuukle-powerbar-top]

Recent Post