Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடலோர மாவட்டங்களில் கன மழை ~ சென்னையை புயல் தாக்குமா ?

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருவதால் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. 

சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் சின்னம் காரணமாக மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான புயல்சின்னம், சென்னையில் இருந்து தென்கிழக்கே 500 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. இது புயலாக மாறி, மேற்கு நோக்கி நகரும் என தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை மாலை நாகப்பட்டினம் – நெல்லூர் இடையே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. 

புயல் கரையைக்கடக்கும்போது மணிக்கு 100 கிலோமீட்டர் வரை தரைக்காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தற்போது பெய்யும் கன மழை இன்று மாலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிக கன மழையாக தீவிரமடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சென்னை, நாகை, கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. புயல் உருவாவதையொட்டி கடலோர மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post