Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பிரபல சீன படத்தின் படப்பிடிப்பு தளத்தில் "ஐ" படக் குழுவினர்.


இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் "ஐ" படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் நடிகர் விக்ரம் ஜோடியாக அமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தளங்கள் பற்றி எழுதியுள்ள அமி ஜாக்சன்,ஆஸ்கர் விருதுபெற்ற சீன படமான "க்ரூசிங் டைகர் கிடுன் டிராகன்" படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலேயே "ஐ" படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்புக்கள் நடைபெறவுள்ளது  என தெரிவித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை,பி.சி.ஸ்ரீனிவாசின் ஒளிப்பதிவு,அந்தோணியின்   தொகுப்பு என இந்திய சினிமா ஜாம்பவான்களின் கூட்டமைப்பில் உருவாகி வருகிறது "ஐ" திரைப்படம்.

இவர்களோடு,  உலக புகழ் பெற்ற "ஹாரி போட்டார்" படங்களில் பணியாற்றிய ஒருவரை, விஷேட காட்சியமைப்பிற்காக ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.

"ஐ" படத்தில் விக்ரம்,அமி ஜாக்சன்,சந்தானம்,சுரேஷ் கோபி,"பவர்ச்டார்" ஸ்ரீநிவாசன் மற்றும் ராம்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்,

[vuukle-powerbar-top]

Recent Post