Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

மீண்டும் இலங்கை படையால் தாக்கப்பட்ட இந்திய மீனவர்கள்

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், 2 விசைப்படகுகளில் நேற்று காலையில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் 16வது கடல் மைல் பகுதியில் வலை விரித்து 19வது கடல் மைல் வரை, மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் படகுகளை சேதப்படுத்தியதுடன், மீன்பிடி வலைகளையும் அறுத்து எரிந்துள்ளனர். 

இந்த தாக்குதலில் 8 மீனவர்களும் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 6 பேருக்கும் லேசான காயம் என்பதால், அவர்கள் தங்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
[vuukle-powerbar-top]

Recent Post