Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கடல் வழியே கூடங்குளம் அணுஉலை முற்றுகை போராட்டம் தொடங்கியது



இன்று காலை திட்டமிட்டபடி அணு உலை முற்றுகை போராட்டம் தொடங்கியது . அதிகாலையில் போராட்டக் கார்கள் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர் . அவர்கள் அனைவர்க்கும் எக்காரணம் கொண்டும் வன்முறையை கையாள வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டது. அரசு வன்முறையை கையாண்டாலும் அணு உலை எதிர்பாளர்கள் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது . பின்பு சுமார் ஒன்பது மணி அளவில் மீனவர்கள் அணு உலையை முற்றுகையிட கடலுக்குள் சென்றனர் . திரு உதயகுமார் , புஷ்பராயண், முகிலன் உட்பட பலரும் கடலுக்குள் படகின் மூலமாக சென்றுள்ளனர். தற்போது சுமார் நூறு  படகுகள் சென்றுள்ளன. மொத்தம் 13 மீனவர் கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் படகுகள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.  அணு உலையில் இருந்து  சுமார் 500 மீட்டார் தூரத்தில் இப்படகுகள்  நிலைகொண்டு முற்றுகையிடும். அதற்கு அப்பால் படகுகள் போகவேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. 

[vuukle-powerbar-top]

Recent Post