Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

படைத்தளபாடங்களை கொள்வனவு செய்வதில் இலங்கை அரசாங்கம் ஆர்வம்


போர்முடிவடைந்தாலும், படைத்தளபாடங்களை கொள்வனவு செய்வதில் இலங்கை அரசாங்கம் இன்னும் ஆர்வமாகவே செயற்பட்டுவது மீண்டும் ஒரு போர் ஏற்படுவதற்கான சூழ்நிலையைக் காட்டுவதாக மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று மரநிழல்களில் வசிக்கும் நிலையில், அவர்களின் ஒரு வேளை உணவுத் தேவைகளைக் கூட சரியாக பூர்த்தி செய்யாத இலங்கை அரசாங்கம் போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதில் அதிக நாட்டம் காட்டுகிறது.
எதிர்வரும் ஆண்டுக்கான பாதீட்டில் கூட அதிகளவான நிதி பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை இலங்கையில் இன்றும் யுத்த மேகம் சூழப்பட்டுள்ளதையே காட்டுகிறது.
இலங்கைக் கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொள்வனவு செய்யுள்ளதாக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களின் ஆற்றலைப் பலப்படுத்திக் கொள்வது போருக்குப் பிந்திய கால முன்னுரிமையாக இருக்கும். 
ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் என்ற வகைக்குள் தற்போது, இந்தியாவிடம் வாங்கப்பட்ட சயுர, சாகர, அமெரிக்காவிடம இருந்து பெறப்பட்ட சமுத்ர, இஸ்ரேலிடம் வாங்கப்பட்ட நந்திமித்ர, சுரனிமல மற்றும் கொழும்பு டொக்யார்ட்டில் கட்டப்பட்ட ஜெயசாகர ஆகிய ஆறு கப்பல்கள் உள்ளன.

இவற்றில் ஜெயசாகர தவிர்ந்த ஏனைய கப்பல்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவை.
கடற்படை, ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்துவதற்குச் சாத்தியம் உள்ளது. மூன்று கப்பல்களில் அதற்கான வசதிகள் உள்ளன. எமது கப்பல்களில் உலங்குவானூர்திகளை இறக்குவது குறித்து விமானப் படையுடன் பேசமுடியும். அதைவிட ஆளில்லா வேவு விமானங்களையும் இதில் வைத்து பயன்படுத்த முடியும் என்றார்.
வல்லரசுகளின் உதவிகளுடன் தமிழ் இனத்தையே அழித்து இனப் படுகொலைகளை மேற்கொண்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் எவ்விதமான தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காது பேச்சுவார்த்தை, நாடாளுமன்ற தெரிவுக் குழு என்று காலத்தை இழுத்தடிக் கொண்டு, போர்த் தளபாடங்களை கொள்வனவு செய்வதிலுள்ள மர்மம் என்ன?
[vuukle-powerbar-top]

Recent Post