Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

திருட்டு இலங்கை திருந்தாத இந்தியா - மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்



தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 604 படகிகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கச்சத் தீவு அருகே நேற்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 6 படகுகளில் வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.போத்தல்களையும் கற்களையும் தமிழக மீனவர்கள் மீது வீசியதோடு படகுகளையும் சேதப்படுத்தியுள்ளனர். 

இதேபோல் இன்று அதிகாலை வேலையிலும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் தமிழக மீனவர்களிடமிருந்து மீன்களையும் திருடிச் சென்றுள்ளனர்.இதனால் தமிழக மீனவர்களுக்கு பலத்த பொருள் சேதம் ஏற்ப்பட்டுள்ளது.மேலும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருட்டு இலங்கையை திருந்தாத இந்தியா எந்தவொரு கேள்வியும் கேட்பதில்லை.இந்திய கடற்படை என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகமும் ஏற்ப்பட்டுள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post