Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தலைமை நீதியரசர் மீதான நம்பிக்கையில்லா பிரேணையில் இலங்கை அமைச்சர்களும் கையெழுத்து

இலங்கையின் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஆளும்கட்சியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் , இலங்கை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலரும் ஒப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தானும் கூட இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாக, இலங்கையின் பிரதி அமைச்சர் ஒருவர் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, தலைமைநீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவுதற்கு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. 

ஆளும்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலர் நியமனத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சேவைமூப்பின் அடிப்படையில் முன்வரிசையில் இருந்த 29 நீதிபதிகளைப் புறம்தள்ளிவிட்டு, 30வது இடத்தில் இருந்த மஞ்சுள திலகரட்ண இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
[vuukle-powerbar-top]

Recent Post