Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

இதையடுத்து, இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் இன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 22 வட்டார அலுவலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை பின்பற்றப்படுகிறது. 

இதையடுத்து, CBSE பள்ளிகளுக்கான தமிழ்ப் புத்தகங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
[vuukle-powerbar-top]

Recent Post