Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இரண்டாக பிரிந்தது யூனிநார் தொலைத் தொடர்பு நிறுவனம்

யூனிநார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை விற்கப் போவதாக யூனிடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் படி யூனிநார் கூட்டு நிறுவனத்தில் தனக்கு இருந்த 32.75 சதவீத பங்குகளை மற்றொரு பங்குதாரரான டெலிநார் நிறுவனத்திடம் யூனிடெக் விற்க உள்ளது. 

இந்தியாவின் யூனிடெக் நிறுவனமும் நார்வே நாட்டின் டெலிநார் நிறுவனமும் கூட்டாக தொடங்கிய நிறுவனமே யூனிநார் ஆகும். 2ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 122 தொலைத் தொடர்பு உரிமங்களை ரத்து செய்தது. 

இதில் யூனிநார் நிறுவனத்தின் 22 உரிமங்களும் அடங்கும். இதையடுத்து இந்நிறுவனம் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே மோதலும் எழுந்தது. 

ஒன்றின் மீது ஒன்று, கம்பெனிகள் சட்ட வாரியத்தில் வழக்கும் தொடுத்தன. இந்நிலையில்தான் இப்பிரச்னையில் திடீர் திருப்பமாக இரு தரப்புக்கும் இடையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

யூனிடெக் விலகலையடுத்து புதிய இந்திய கூட்டாளியை தேட வேண்டிய நிலையில் டெலிநார் தற்போது உள்ளது.
[vuukle-powerbar-top]

Recent Post