Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

பாதுகாப்புக்கு பயங்கரவாதம் பெரும் சவால் ~ எஸ்.எம்.கிருஷ்ணா

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐநா பொதுச்சபையின் 67வது வருடாந்திர கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உரை நிகழ்த்தினார். ஐநா பாதுகாப்பு அவை விரிவாக்கம், ஜம்மு-காஷ்மீர் பிரச்னை உட்பட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். 

கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கிய ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று உரை நிகழ்த்தினார். ஐநா பாதுகாப்பு அவையை விரிவாக்க வேண்டும், இந்தியாவுக்கு அதில் நிரந்தர உறுப்பினர் பதவி தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அண்டை நாடுகள் ஒவ்வொன்றுடனும் சமூக, பொருளாதார, அரசியல் உறவுகளை வலுப்படுத்தவே இந்தியா விரும்புவதாகவும், ஆப்கானிஸ்தானில் மீள் கட்டுமானப் பணிகளுக்கு இந்தியா உதவும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். 

பாகிஸ்தானுடன் நல்லுறவை உருவாக்க படிப்படியாக முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றார். 

கடற்கொள்ளையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிரியாவில் சண்டையை நிறுத்திவிட்டு அமைதிவழியில் பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினரும் முன்வர வேண்டும் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்கா, ஈரான், சிரியா உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் உரையாற்றினர்.
[vuukle-powerbar-top]

Recent Post