Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

தயாரிப்பாளராக ஆசைப்படும் ஹன்ஷிகா.



எப்போதும் தேனீ போல மிக பரபரப்பாக நடித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாது,ஊடகங்கள் மூலமாக அவ்வப்போது அலசப்படும் ஒரே நடிகை ஹன்ஷிகா.

அவரைப் பற்றிய செய்திகள் பொதுவாக அவர் நடித்துக் கொண்டிருக்கும், மற்றும் அவர் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கும் படங்களை பற்றியதாகவே இருக்கும்.ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக வேறொரு செய்தி அவரை பற்றி வெளிவந்துள்ளது.

தற்போது வந்துள்ள செய்தியாக, நடிகை ஹன்ஷிகா படத் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க இருப்பது பற்றியதாகும்.தனக்கான ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன்  மூலம் பல படங்களை தயாரிக்கும் எண்ணத்தில் ஹன்ஷிகா இருப்பதாக கோடம்பாக்கம் முழுவதும் கிசுகிசுக்கப்படுகிறது.

அத்தோடு மட்டுமல்லாது சுமார் 20 கோடி ரூபாய்க்கு ஆடம்பர பங்களா ஒன்றையும் சென்னையில் வாங்குவதற்கு ஹன்ஷிகா முயற்சிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இவை யாவும் பொய்யான வெறும் வதந்தி என்பதை ஹன்ஷிகா சொன்னால் மட்டுமே இவற்றுக்கெல்லாம் விடை கிடைக்கும்.

[vuukle-powerbar-top]

Recent Post