Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

சல்மான் குர்ஷித் நீக்கப்பட மாட்டார்: நாராயணசாமி

சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் சுமர்த்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக மத்திய அமைச்சரவையிலிருந்து சல்மான் குர்ஷித் நீக்கப்படமாட்டார் என மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

குர்ஷித் மற்றும் அவரது மனைவி லூயிஸ் குர்ஷித் மீது ஊழல் தடுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆதாரமற்ற புகார்களை கூறுவதை நிறுத்த வேண்டும் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை சரி செய்ய மத்திய அரசிடமிருந்து கூடுதல் மின்சாரம் பெற்று தர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். 

காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்படும் என்றும் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post