Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கிரனைட் முறைகேடு: துரை தயாநிதியை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

கிரனைட் முறைகேடு வழக்கில் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்பட 8 பேருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக மதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெய்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது அவர்கள் 8 பேரையும் கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். கிரனைட் முறைகேடு தொடர்பான வழக்கில், ஒலிம்பஸ் நிறுவன பங்குதாரர்கள் துரை தயாநிதி, நாகராஜன் மற்றும் பிஆர்பி நிறுவன உரிமையாளர் பழனிச்சாமியின் மனைவி செல்வி, மகன்கள் சுரேஷ் குமார், செந்தில் குமார் உட்பட 8 பேர் தலைமறைவாக உள்ளனர். 

இந்நிலையில், துரை தயாநிதிக்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். 

கிரனைட் முறைகேடு விவகாரத்தில் அனைவர் மீதும் வழக்கு தொடரப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
[vuukle-powerbar-top]

Recent Post