Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் லங்காசிறியின் பம்மாத்து மீண்டும் அம்பலம்

2008 ஆம் ஆண்டு வெளிவந்து, அடுத்த வருடம் ஒஸ்கார் விருதுகளை வென்று குவித்த பிரித்தானிய திரைப்படம்தான் சிலாம்டாக் மில்லியனயர்.
பிரித்தானிய நாட்டு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். இந்திய கலைஞர்களின் பங்களிப்பு இத்திரைப்படத்தில் மிகவும் காத்திரமானது.
இந்திய நடிகர்கள் நடித்தனர். இசைப் புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து இருந்தார்.
முதலில் கோல்டன் குளோப் விருதும், பின்பு ஒஸ்கார் விருதும் இத்திரைப்படத்துக்கு கிடைக்கப் பெற்றன.
குறிப்பாக இசைப் புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு ஒஸ்கார் விருதுகள் இரண்டு கிடைக்கப் பெற்றன. ரசூல் பூக்குட்டி, குல்லார் ஆகிய இந்தியர்களுக்கும் இத்திரைப்படம் ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது.
ஆங்கிலத்தில் மட்டும் அன்றி இந்தியிலும் இத்திரைப்படம் வெளியானது. தமிழில் நானும் கோடீஸ்வரன் என்கிற பெயரில் டப் செய்யப்பட்டது.
மும்பையில் ஒதுக்குப்புற குப்பத்தைச் சேர்ந்த பிச்சைக்கார சிறுவன் கோடீஸ்வரன் ஆகின்றமைதான் கதையின் சுருக்கம்.
இந்திய எழுத்தாளர் விக்காஸ் சுவரூப் எழுதிய கியூ அண்ட் ஏ என்கிற நாவலின் தழுவித்தான் சிலாம்டாக் மில்லியனயர் திரைப்படம் வந்து உள்ளது.
இத்திரைப்படம் பற்றி நாம் இப்போது பேசுகின்றமைக்கு பொருத்தமான காரணம் இல்லாமல் இல்லை.
தாயகத் தமிழர்களையும், புலம்பெயர் தமிழர்களை மாட்டு மந்தைக் கூட்டங்கள் என்று முடிவெடுத்து, முற்றிலும் பொய்யான செய்திகளை அதிகம் பிரசுரித்து, சொந்தப் பொக்கெற்றுக்களை நிரப்பி வருகின்ற லங்காசிறி செய்திக் குழுமத்தின் ஊடக பம்மாத்தை விளங்கிக் கொள்கின்றமைக்கு இப்பீடிகை அவசியமாக உள்ளது.
லங்காசிறி இணையத்தில் யாழ்ப்பணத்தில் வீசும் வடக்கின் வசந்தம்-பிச்சை எடுக்கும் சிறுவர்கள்(படங்கள் இணைப்பு) என்கிற தலைப்பில் ஒரு செய்தி அதிரடியாக  வெளிவந்து உள்ளது. யாழ்ப்பாணம் என்பதை எழுத்துப் பிழையாக யாழ்ப்பணம் என்று போட்டு இருக்கின்றார்கள். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள யாழ்ப்பாணத் தமிழர்களின் பணத்தை சுருட்டி, ஏப்பம் விடுகின்றமைதான் லங்காசிறிக்காரர்களின் நோக்கம் என்பதால்தான் யாழ்ப்பணம் என்று பிரசுரித்து உள்ளனர் என்று கொள்ள வேண்டி உள்ளது.
இச்செய்தியில் யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுக்கின்றவர்களாக சில சிறுவர்களின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவை உண்மையில் யாழ்ப்பாண சிறுவர்களின் புகைப்படங்கள் அல்ல. மாறாக சிலாம்டாக் மில்லியனயர் திரைப்படத்தில் வெளிவந்த காட்சிகளில் சிலவற்றின் புகைப்படங்கள் இவை.
யாழ்ப்பாணத்தில் பாலும், தேனும் கொட்டிக் கிடக்கின்றது என்று நாம் சொல்ல வரவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கே. பி, அங்கயன் இராமநாதன் போன்றவர்களின் இணக்க அரசியல் முயற்சியால் போருக்கு பிந்திய யாழ்ப்பாணம் புத்துயிர் பெற்று வருகின்றது. வடக்கின் வசந்தம் உண்மையில் வட மாகாணத் தமிழர்களுக்கு வரப் பிரசாதம் ஆகும்.

முற்றிலும் பொய்யான, உண்மைக்கு புறம்பான செய்தியை திட்டுமிட்டு லங்காசிறி குழுமம் பிரசுரித்து இருக்கின்றமைக்கு இரு பிரதான காரணங்கள்தான் பின்புலத்தில் இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக இல்லை என்கிற மாயையை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாக்குவது ஒரு காரணம். அடுத்த கட்டமாக இப்புகைப்படங்களை காண்பித்து மனித நேயம் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து மனிதாபிமான நிதி என்கிற பெயரில் பெரிய தொகைப் பணத்தை பகல் கொள்ளை அடிப்பது இரண்டாவது காரணம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், லங்காசிறி குழுமத்தினரின் உறவுக்காரருமான சிவஞானம் சிறிதரனின் ஆசிர்வாதம், பங்குபற்றுதல் ஆகியவற்றுடன் இம்மோசடிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
லங்காசிறியின் இன்னொரு மோசடியையும் நாம் இங்கு வெளிப்படுத்த வேண்டி உள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி போன்றவர்கள் நடத்துவது போல இணையத் தளங்களை நடத்தி கூகுள் அட்சென்ஸ் மூலமாக பணம் சம்பாதித்தும் வருகின்றது லங்காசிறி. ஆனால் மேற்சொன்னவர்களுக்கும் லங்காசிறியால் நடத்தப்படுகின்ற டம்மித் தளங்களுக்கும் உண்மையில் எவ்வித சம்பந்தமுமே கிடையாது. எனவே வாசகர்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

நன்றி-Jaffna cnn
[vuukle-powerbar-top]

Recent Post