Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு

காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறது. 

இத்தகவலை கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். காவிரி நீர் பிரச்னையை சட்டப்பூர்வமாக அணுக முடிவு செய்திருப்பதாகவும், இதையடுத்து காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 

மேலும், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் பசவராஜ் தெரிவித்தார். முன்னதாக அவருடன் காவிரி விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகெளட ஆலோசனை நடத்தினார்.பிரதமரின் உத்தரவுப்படி காவிரியில் தினமும் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடிநீரை கர்நாடக அரசு தற்போது திறந்துவிட்டுள்ளது. ரயில் மறியல் போராட்டம் : 

காவரியில் இருந்து தமிழகத்தற்கு தினமும் 2 டிஎம்சி தண்ணீர் விடுவிக்க வலியுறுத்தி நாளை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

இதனை அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன், திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் 115 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளதாகவும், ஆனால் கர்நாடகத்தின் பிடிவாதத்தால் தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
[vuukle-powerbar-top]

Recent Post