Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

போர்க்குற்ற ஐ.நா விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயார் ~ இலங்கை அரசு

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அரசின் உயர் அதிகாரி கருணதிலகே அமுங்கமா, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் நடைபெறும் விசாரணையை எதிர்கொள்ள தயாராகி வருவதாக கூறினார். 

இதனிடையே பசுமை தாயகம் அமைப்பு சார்பாக ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி விமானம் மூலம் இன்று அதிகாலை ஜெனீவா புறப்பட்டுச் சென்றார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்று தான் தீர்வு என்பதை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமை அவையில் தாம் பேச இருப்பதாகவும் அவர் கூறினார்.
[vuukle-powerbar-top]

Recent Post