Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

நல்லூர் பிரதேச சபைக்குச் செந்தமான காணியில் இலங்கை இராணுவத்தினரின் படைமுகாம்


நல்லூர் பிரதேச சபைக்குச் செந்தமான காணியினை அத்துமீறி கையகப்படுத்தியுள்ள இலங்கை இராணுவத்தினர் அக்காணிக்குள் படைமுகாம் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் குறித்த காணிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் உள்ள மக்கள் மத்தியில் அச்சநிலை எற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துளது.

கடந்த சில மாதங்களாக நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தாமன 5 பரப்புக் காணியை தமக்குத் தருமாறு  இலங்கை  இராணுவத்தினர் சபையிடம் கோரி வந்திருந்தனர். ஆயினும் குறித்த காணியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு பிரதேச சபை திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த காணியில் இருந்த காவலாளியை அச்சுறுத்தி அங்கிருந்து கலைத்த இலங்கை  இராணுவத்தினர் அக்காணிக்குள் யாரும் செல்லாத வகையில் கதவினை பூட்டி வைத்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் அக்காணிக்கு வாகனங்களில் வந்திறங்கும் இலங்கை  இராணுவத்தினர் அக்காணிக்குள் சிறிய பாதுகாப்பு அரண் ஒன்றினை அமைத்துள்ளனர்.
மேலும் படைமுகாம் அமைப்பதற்கு தேவையான பொருட்களும் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது என்று மேலும் அங்கிருந்து  வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
[vuukle-powerbar-top]

Recent Post