Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக இங்கிலாந்தில் போராட்டம் அறிவிப்பு


பிரித்தானிய வாழ் தமிழர்கள் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக  வெளியுட்டுள்ள அறிக்கை வருமாறு : 

பிரித்தானியாவில் எதிர்வரும் 24ம் திகதி மாலை 4 மணி தொடங்கி 7 மணிவரை இந்தியா ஹவுஸ், ஆல்ட்விச், இலண்டன் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்திய தூதுவராலயம் முன்பாக தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு உலையை நிறுத்துவது உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழ் சொலிடாரிட்டி எனும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்திற்கு பிரித்தானியாவில் உள்ள பல அமைப்புகள் கைகோர்த்துள்ளது. பல இன மக்களின் ஆதரவுடன் இப்போராட்டம் நடைபெற உள்ளது. பிரித்தானியா வாழ் தமிழர்கள் கட்டாயம் இப்போராட்டத்தில் கலந்து உங்கள் ஆதரவை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும். இந்தியாவில் உள்ளவர்கள் பிரித்தானியாவில் வாழும் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு இப்போராட்டத்தை தெரியப்படுத்தி கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு வேண்டுகின்றோம். நீதியான போராட்டங்கள் ஒரு போதும் தோற்காது எழுச்சி கொண்ட மக்களுக்கு முன்னால் அது தாக்குப் பிடிக்காது என்பது வரலாற்று உண்மை. அணு உலைகளுக்கு எதிராக திரளுவோம் நம்மையும் எதிர்கால சந்ததிகளையும் காத்திடுவோம்.



[vuukle-powerbar-top]

Recent Post