Latest News

தங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்
newsalai.com@gmail.com

இடிந்தகரை மக்கள் மீண்டும் கடல் தொழிலுக்கு செல்ல முடிவு

கூடங்குளத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 421 வது நாளாகின்றது. கடந்த செப்டம்பர் மாதம் அணுஉலை முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து கடல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட இடிந்தகரை மக்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லவில்லை.

தொடர்ந்து போராட்டங்கள் கூட்டங்கள் என நடைபெற்றதால் தங்களால் கடலுக்கு செல்ல முடியாமல் இருந்தது.

நேற்றையதினம் கடலில் முற்றுகை போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்று ஊர்தலைவர்கள் இடிந்தகரை பந்தலில் ஒன்று கூடி கூட்டத்தினை நடத்தினர். இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனை ஊர்மக்களுக்கு பறை அடித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


[vuukle-powerbar-top]

Recent Post